324. வருடாந்திர Appraisal - மேலாளர்களுக்கு குறிப்புகள் - பாகம் 2
பாகம் ஒன்றை வாசித்து விட்டுத் தொடரவும். சென்ற பதிவில் அப்ரைசல் பற்றி 5 குறிப்புகளை அளித்திருந்தேன். ஆறாவதிலிருந்து தொடர்கிறேன்!
6. Setting Goals (to the appraisee) என்பது, (அந்த இலக்குகளை முன்னிறுத்தும் மேலாளர்) எத்தகைய தொலை நோக்கோடு இருத்தல் அவசியம் என்பதற்கு ஒரு சூப்பர் உதாரணத்தை அந்த பயிற்சியாளர் தந்தார்.
அமெரிக்காவில் ஒரு பழமையான பல்கலைக்கழகக் கட்டடம் (எந்த மாகாணம் என்று ஞாபகமில்லை!) கட்டப்பட்ட சமயத்தில், கட்டடப் பொறியாளர் தூண்(column), குறுக்குச் சட்டம்(beam) போன்றவற்றை வலிமையான மரத்தால் (ஒரு வகை டிம்பர்) அமைத்திருந்தார். ஒரு இருநூறு ஆண்டுகள் ஆன பின், கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை சோதிக்க நிபுணர் குழு ஒன்று கூட்டப்பட்டது. பழமையான ப்ளூ பிரிண்ட் அறையில் இருந்த கட்டடத்தின் வரைபடங்களை ஆராய்ந்த நிபுணர்கள், ஒரு பெரிய வரைபடத்தின் ஓரத்தில், சின்ன மேப் ஒன்று இணைக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தின் அருகில் இருந்த வனத்திலுள்ள ஓர் இடம் அந்த மேப்பில் குறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, 'என்ன இது' என்று வியப்படைந்தனர்.
பல்கலைக்கழகத்தின் மெயின் ஹாலில் அமைக்கப்பட்டிருந்த, பெரிய அளவிலான, மரத்தாலான, ஒரு குறுக்குச் சட்டம் சற்றே தளர்ச்சியடைந்து விட்டதால், அதைக் கட்டாயம் மாற்றியாக வேண்டும் என்பது நிபுணர் குழுவின் முக்கியப் பரிந்துரை. மேலும், சிலபல மாற்றங்களையும் பரிந்துரைத்தது. மேப்பில் குறிப்பிடப்பட்டிருந்த வனப்பகுதிக்கு சென்ற நிபுணர் குழுவினர், அங்கு சீரான வரிசையில், பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த மரங்களைக் கண்டனர். பல்கலைக்கழகத்தில் மரவேலைக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட அதே வகை (வலிமை வாய்ந்த) மரங்கள் அவை என்று அறிந்து நிபுணர்கள் ஆச்சரியமடைந்தனர்.
அதாவது, 200 ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகம் கட்டப்பட்ட சமயத்திலேயே, தொலைநோக்குப் பார்வையோடு, அந்த கட்டடப் பொறியாளர், அப்போது மரவேலைக்குப் பயன்படுத்தப்பட்ட மரத்தின் விதைகளை அருகிலுள்ள வனத்தில் வரிசையாக விதைத்திருந்தார். அவை நிபுணர் குழு முன்னால், விருட்சங்களாகக் காட்சியளித்தன.
பல ஆண்டுகளுக்குப் பின், கட்டடத்தின் ஸ்திரத்தன்மைக்கு அத்தியாவசியமான columns, beams ஆகியவற்றை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் என்பதை அவர் உணர்ந்து செயல்பட்டதால்,பல்கலைக்கழக கட்டடத்தை, அதன் புராதனத்தன்மை குன்றா வண்ணம், அதே வகை மரம் கொண்டு அழகாக சீரமைக்க முடிந்தது.
7. ஒரு மேலாளர், தனக்கு மேலேயும் ஒரு மேலாளர் உள்ளார் (அதாவது தனக்கு மேலே hierarchy, authority உள்ளன!)என்பதை தான் மதிப்பீடு செய்யும் நபருக்கு subtle-ஆக உணர்த்துவதில் தான் மேலாளரின் திறமை அடங்கியிருக்கிறது.
8. அடுத்து, Objectiveness என்றால் என்ன என்பது குறித்த தெளிவுக்கு, நடந்த சம்பவம் ஒன்றை பயிற்சியாளர் நினைவு கூர்ந்தார். அவர் வேலை செய்த நிறுவனம் ஒன்றில், மார்க்கெட்டிங் அணியில் அவருடன் பணி புரிந்த ஒருவரை, முதலில் கம்பெனி மேலாளர் அப்ரைசல் செய்து, சிலாக்கியமாக எதுவும் கூறாமல், கடுமையான உழைப்பாளியான, நேர்மையான, அந்த நபரை மூட்அவுட் செய்து அனுப்பி விட்டார். ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த நம் பயிற்சியாளர், "நான் வேண்டுமானால் அவரிடம் பேசிப் பார்க்கட்டுமா?" என்று மேலாளரிடம் கேட்டு விட்டு, அந்த நபருடன் மனம் விட்டுப் பேசியதில், அந்த நபர் கிராமத்துச் சூழலிலிருந்து வந்ததும், தன்னம்பிக்கை மற்றும் நுனி நாக்கு ஆங்கிலப்புலமை சற்றே குறைந்தவராக இருந்தும், தனது கடின உழைப்பால், அந்த நபருக்கு வழங்கப்பட்ட வருடாந்திர டார்கெட்டில் (TARGET) 80% இலக்கை அடைந்து விட்டதும், பயிற்சியாளருக்குப் புரிந்தது. பயிற்சியாளரோ, கொடுத்த டார்கெட்டுக்கு மேலே achieve செய்தவர். இருந்தாலும், அந்த நபரின் அருமை பயிற்சியாளருக்கு விளங்கியது!!!
இதற்கு பயிற்சியாளர் ஒரு மேற்கோள் காட்டினார். அதாவது, ஒரு பரம ஏழை தன்னிடம் இருந்த ஒரே நூறு ரூபாய் நோட்டை, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் உதவி நிதிக்காக வழங்குவதையும், ஒரு பெரும் பணக்காரர் அதே நிதிக்கு 10 லட்ச ரூபாய் தருவதையும் சுட்டிக் காட்டி, "யார் கொடை பெரியது ? இவர்கள் இருவரில் யார் சிறந்தவர் என்று கூறுவீர்கள்?" என்று வினாவெழுப்பிய பயிற்சியாளர், objectiveness என்பதை நாங்களாகவே உணருமாறு செய்தார்!
9. அப்ரைசலின் திருவாசகம் ஒன்றை பயிற்சியாளர் கூறினார்:An appraiser has a responsibility in the performance of the appraisee! இதற்கு மேலாளர் செய்ய வேண்டியதெல்லாம், தனக்குக் கீழே பணி புரியும் நபருக்கு "நீட்டப்பட்ட இலக்கு"களை (Stretch Goals) அளிப்பது தான் சிறந்த வழி. அதன் மூலம், அப்ரைசரான மேலாளர், தனது பொறுப்பான ஆதரவை (responsible support) அந்த நபருக்கு அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார், இல்லையா ? அந்த நபரின் performance-இல் மேலாளருக்கு ஒரு பொறுப்பு உண்டாகிறது! சம்பந்தப்பட்ட நபரும் தனது comfort வட்டத்திலிருந்து வெளிவந்து, courage வட்டத்தில் செயல்படத் தொடங்குவதால், இம்முறை எல்லார்க்கும் பயன் தருவதாக அமைந்து விடுகிறது!
10. மேற்கூறியதை விளக்க, ஒரு கழுகுக் குஞ்சானது பிறந்து, வளர்ந்து, பறக்கத் தொடங்கும் வரை, அதன் பெற்றோர் கடைபிடிக்கும் வழிமுறையை (process of bringing-up) பயிற்சியாளர் மேற்கோள் காட்டினார்.
அதாவது, அந்த கழுகுக் குஞ்சின் பெற்றோர், ஆரம்பத்தில் சின்னக் கழுகிற்கு மலை உச்சியில் சொகுசான கூடு கட்டி, இரை எடுத்து வந்து தந்து, அதை ஆபத்திலிருந்து காத்து, அதன் பயத்தை போக்கி ஆதரவாக இருந்து, அக்குஞ்சை comfort வட்டத்தில் வைத்திருக்கும்.
சிறிது காலத்திற்குப் பின், கூட்டைக் சிறிது சிறிதாகக் கலைத்து, குளிரிலும், வெயிலிலும் (சின்னக்கழுகை) கஷ்டப்பட வைத்து, அதை உணவுக்கு அலைபாய வைத்து, அதை பறக்க வைக்க மலை உச்சியிலிருந்து அடிக்கடி தள்ளி இம்சை பண்ணி, அது படபடவென இறக்கைகளை அடித்து அல்லாடி தரையில் மோத இருக்கும் சமயத்தில் அதைக் காப்பாற்றி, பெற்றோர் துணை இல்லா உலகில் தனித்து வாழ சின்னக் கழுகை தயார்படுத்த வேண்டி, அதை courage வட்டத்திற்கு அதன் பெற்றோர் தள்ளி விடுகின்றன.
இம்மாதிரி அந்த கழுகின் பெற்றோர் போல் ஒரு மேலாளர் நடத்தல் அவசியமாகிறது.
11. தனக்குக் கீழே பணி புரியும் அனைவரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் என்ற மிகச் சாதாரண விஷயத்தை ஒரு மேலாளர் தன் மனதில் திடமாகக் கொள்வதும் அவசியமாகிறது. இதைக் கூட சில மேலாளர்கள் புரிந்து கொள்வதில்லை!!! ஒருவரை, அணியில் இருக்கும் இன்னொருவருடன் கம்பேர் (compare) செய்யவே கூடாது.
சீனாவில் உள்ள ஒரு வகை மூங்கில், முதல் 5-6 வருடங்கள் அதிக வளர்ச்சியின்றி இருந்து, அடுத்த 5-6 வாரங்களில் அசுர வளர்ச்சி (90 அடி உயரம்!) அடைகிறது. அது போலவே, பணியாளர்களில் சிலர், பணியைக் கற்றுக் கொள்ள சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் (Learn it slow but good!), பின்னாளில் பணி புரியும் நிறுவனத்துக்கு மிக்க பயனுள்ளவர்களாகத் திகழக் கூடிய சாத்தியம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு மேலாளருக்கு தொலை நோக்கு அறிவு வேண்டும்!
12. ஒரு நிறுவனத்தின் எதிர்பார்ப்புகள் (organizational expectations) போலவே, தனி நபரின் இலக்குகளும் (individual aspirations) முக்கியமானவை என்று ஒரு அப்ரைசர் (மேலாளர்) உணர்வதும், அதற்கேற்ற வண்ணம் செயல்படுவதும், அவரின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.
13. பணி புரியும் இடம் என்பது, ஒரு கல்லூரி வளாகத்திற்கு ஈடாகவும், பிசினஸ் என்பது பாடத்திட்டத்திற்கு (curriculum) ஒப்பாகவும், மேலாளர்கள்/பிராஜெக்ட் லீட் என்பவர்கள் ஆசிரியர்களுக்கு நிகராகவும் அமையும் நிறுவனம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனம். மேற்கூறிய மூன்றும், கஸ்டமர்களும் நிறுவனம் என்ற கட்டடத்தின் 4 தூண்களாக விளங்குகிறார்கள். இக்கட்டடத்தின் அடித்தளம் (foundation)பணியாளர்களால் (employees) அமைக்கப்படுகிறது! அதன் மேற்கூரை, தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகிறது, அதாவது, Technology is the Enabler! இம்மாதிரியான ஒரு நற்சூழல் வாய்க்கப்பெற்ற ஒரு நிறுவனத்தில், மேலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையேயான நல்லுறவும் பலம் பெறுகிறது.
14. அடுத்து அப்ரைசலின் இரண்டு முக்கியக் கோட்பாடுகள்!
(i) During the appraisal, you COMMUNICATE, not SPEAK!
(ii) NEVER postpone the appraisal discussion and NEVER allow
interruptions during the appraisal session!
என்ன, கிளாஸ் எடுத்து ரொம்பவே போரடிச்சுட்டேனா ????? பொறுமையாக வாசித்தமைக்கு நன்றிகள் பல!
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 324 ***

9 மறுமொழிகள்:
Test comment :)
//பல்கலைக்கழகத்தில் மரவேலைக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட அதே வகை (வலிமை வாய்ந்த) மரங்கள் அவை என்று அறிந்து நிபுணர்கள் ஆச்சரியமடைந்தனர்.//
ரீடர்ஸ் டைஜஸ்டில் இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சிக்கான எக்ஸ்டென்ஷன் ஒன்று தரப்பட்டது.
அதாவது அங்கிருந்த மரங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து பார்த்த போது 200 ஆண்டுகளுக்கு முன்னால் அதே மரம் பரிசோதிக்கப்பட்டது, ரிஜக்டும் செய்யப்பட்டது என்பதை பழைய ரிக்கார்டுகளிலிருந்து அறிந்து கொண்டனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்னிக்கு அலைன்மெண்ட் ஜஸ்டிபய்டா? நெருப்புநரியில் சரியாத் தெரியலையே!
இலவசக்கொத்தனார், ஓ! அதுதானா காரணம். பாலாவோட முந்தைய பதிவு சரியா தெரிஞ்சுதேன்னு பாத்தேன்.
Dondu Sir,
Thanks !
//இலவசக்கொத்தனார் said...
இன்னிக்கு அலைன்மெண்ட் ஜஸ்டிபய்டா? நெருப்புநரியில் சரியாத் தெரியலையே!
11:29 PM, April 05, 2007
Guru Prasath said...
இலவசக்கொத்தனார், ஓ! அதுதானா காரணம். பாலாவோட முந்தைய பதிவு சரியா தெரிஞ்சுதேன்னு பாத்தேன்.
//
Thanks. I will remove the "Alignment Justification" :)
Thank you Mr. Bala. Very good and usefull info.
//
Anonymous said...
Thank you Mr. Bala. Very good and usefull info.
//
Thank you, anony Sir :)
Thanks for the useful tips ....
உபயோகமான பதிவு
இதை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2007/05/01/aapuraisal/
Post a Comment